தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் ஜூன் 7ம் தேதி காலை 6 மணி வரையுள்ள காலகட்டத்தில், கோயம்பேடு மற்றும் மாவட்டங்களின் பிற பகுதிகளில் உள்ள மொத்த காய்கனி, பூ சந்தைகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்த காய்கனி மற்றும் பூ சந்தைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் , சில்லரை வணிகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ரயில்வே, விமானம் மற்றும் கடல்சார் துறைமுகங்களில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கான தொலைதொடர்புத்துறை, அஞ்சல்துறை ஊழியர்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ரத்த வங்கிகள் இயங்கவும் அனுமதிக்கப்படுகிறது.தன்னார்வலர்கள், உணவு வழங்குவோர் இ-பதிவு செய்து இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் உள்ள கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கவும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment