நாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/05/2021

நாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு


சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வரத் தேவையில்லை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. குறிப்பாகச் சென்னை, கோவை போன்ற நகரங்களில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 50 வயதுக்கு உட்பட்ட 42 பேர், இணை நோய்கள் இல்லாத 34 என மொத்தம் 167 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவிகித பணியாளர்கள், மளிகை, தேநீர்க் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு, பொது போக்குவரத்தில் 50% மட்டுமே பயணிக்க வேண்டும் எனப் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. மிழக அரசு அதிரடி.. கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்இந்நிலையில் தமிழ்நாட்டு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், கொரோனா அதிகரித்து வருவதால் மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாளை முதல் 20ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459