பொறியியல் மாணவர்களுக்கான அரியர் தேர்வு.. எந்த ரெகுலேஷனுக்கு எப்போது எக்சாம்.. தமிழக அரசு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/05/2021

பொறியியல் மாணவர்களுக்கான அரியர் தேர்வு.. எந்த ரெகுலேஷனுக்கு எப்போது எக்சாம்.. தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான அரியர் தேர்வு எப்போது நடக்கும் என்பது குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தன. அதோடு அதோடு பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வில் முறைகேடுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.இந்த நிலையில் இதுவரை தள்ளிப்போன பல்வேறு தேர்வுகள், மற்றும் அரியர் தேர்வுகள் எப்போது நடக்கும் என்றுஉயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பேட்டி அளித்தார். அதன்படி தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017 ரெகுலேஷன் படி படித்த முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் அரியர் தேர்வுகள் நடக்கும். இந்த தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடக்கும். 2017 ரெகுலேஷன் அல்லாத முந்தைய ரெகுலேஷன் படி படித்த முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு அரியர் தேர்வுகள் ஜூன் 21ம் தேதி துவங்குகிறது. இதற்காக மாணவர்கள் ஜூன் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்.இந்தியாவில் தொடங்கியது ஸ்புட்னிக் வி உற்பத்தி.. ஆண்டுக்கு 10 கோடி டோஸ்கள வரை தயாரிக்க இலக்கு 2013 ரெகுலேஷனில் படித்த இளங்கலை, முதுகலை பொறியியல் மாணவர்களுக்கான அரியர் தேர்வு வரும் ஜூன் 21ம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எல்லோரும் 3 மணி நேரம் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே எழுத வேண்டும்.ஜூலைக்குள் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மாணவர்கள் உயிர் முக்கியம் என்பதால் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதாக.: ,

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459