ஜூன் மாதத்திற்குள் தொற்று குறைந்துவிட்டால், ஜூலை மாதத்திலிருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அச்சடித்து முடிக்கப்பட்டுள்ளன. 6 கோடி இலவச பாடப் புத்தகங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் முழுமையாக அனுப்பப்பட்டு விட்டன என்றும் , பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் புத்தகங்கள் உடனடியாக மாணவர்களுக்கு வழங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாட புத்தகங்களும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment