டிஆர்டிஓ-வின் 2-DG மருந்து - கொரோனா சிகிச்சையில் பெரிய மாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/05/2021

டிஆர்டிஓ-வின் 2-DG மருந்து - கொரோனா சிகிச்சையில் பெரிய மாற்றம்

 டிஆர்டிஓ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள 2-டிஆக்சி -டி குளுக்கோஸ் என்ற 2-DG மருந்தானது கொரோனா சிகிச்சையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அந்த மருந்து எப்படி செயல்படுகிறது என்பது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு 

 

நமது உடலில் நுழையும் கொரோனா வைரஸ், மனித உடலின் புரோட்டீன் எனப்படும் புரதத்தை உறிஞ்சிக் கொண்டு செல்களை ஏமாற்றி பல்கிப் பெருகுகிறது. அதற்கு குளுக்கோஸ் எனும் சக்தி தேவைப்படுகிறது. அதை போலியான வடிவில் கொடுத்து கொரோனா வைரஸ் தன்னை பெருக்கிக்கொள்ளாமல் போகச்செய்வது தான் இந்த மருந்தின் சிறப்பம்சமாகும். 

 

உடலுக்கு சக்தியை அளித்து வாழ்வாதாரமாக விளங்கும் டி-குளுக்கோஸ் போன்ற தோற்றத்தில் 2-DG குளுக்கோஸ் உருவாக்கப்பட்டுள்ளது. குளுக்கோசில் உள்ள இரண்டாம் கார்பன் அணுவில் இருந்து ஆக்சிஜன் அகற்றப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதால் அதற்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. D-குளுக்கோஸ், போன்றே இருப்பதால், அது, ஏற்கனவே கொரோனா வைரஸ் குடியிருக்கும் செல்களில் மிகவும் எளிதாக நுழைந்து விடும். 

 

வழக்கமாக, செல்களில் குளுக்கோசானது கிளைகோசிஸ் என்ற வேதியல் மாற்றத்திற்கு ஆட்பட்டு சக்தி வெளிப்படுகிறது. இந்த சக்தியை வைத்து தான் உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழ்கின்றன. கொரோனா வைரசும் இந்த சக்தியில் தான் உயிர் வாழ்கிறது. ஆனால் டி குளுக்கோஸ் போலன்றி, 2-DG குளுக்கோஸ், கிளைகோசிஸ் என்ற வேதிமாற்றம் நடத்த உதவாது. எனவே அதில் இருந்து எந்த சக்தியும் கிடைக்காது. உயிர்வாழத் தேவையான சக்தி கிடைக்காத காரணத்தால் செல்களில் இருக்கும் கொரோனா வைரஸ் ஒரு வாரத்திற்குள் இறந்து விடும். 

 

டிஆர்டிஓ கண்டுபிடித்துள்ள இந்த மருந்தின் 10 ஆயிரம் டோசுகள் இன்று அல்லது நாளை தயாராகும் என கூறப்படுகிறது. இந்த மருந்தின் பெரிய அளவிலான உற்பத்தி ஐதராபாத்திலும் இதர நகரங்களிலும் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடலில் நுழைந்து, செல்களை ஏமாற்றி, உயிரை பறிக்கும் கொரோனா வைரசை ஏமாற்றுகிற சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. 

 


கொரோனா நோயாளிகள் உயிர்வாழ மருத்துவ ஆக்சிஜனை நம்பி இருக்க வேண்டிய நிலைமையும் இந்த மருந்து குறைப்பதாக கூறப்படுகிறது. இதே வேதிமாற்ற தன்மை காரணமாக, இந்த மருந்து கேன்சர் மருந்தாகவும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே கொரோனா வைரசை அழித்து கோடிக்கணக்கான மக்களின் உயிரை காக்க வல்லது இந்த மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.-Polimer News

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459