தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கவில்லை: போதிய அளவில் கையிருப்பு இல்லை என அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/05/2021

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கவில்லை: போதிய அளவில் கையிருப்பு இல்லை என அறிவிப்பு

 

665832

தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் போதுமான தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் திட்ட மிட்டபடி 18 வயதுக்கு மேற்பட் டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப் படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா 2-வது அலை நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி  தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கான இணையதள பதிவு கடந்த 28-ம் தேதி தொடங்கியது.


ஆனால், போதிய அளவில் தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்படவில்லை என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் அறிவித் துள்ளன.

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் கூறும் போது, ‘‘தற்போதைய நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். 18 வயது முதல் 44 வயது வரை யிலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வர வேண்டாம்’’ என்றார்.

டெல்லி சுகாதாரத் துறை அமைச் சர் சத்யேந்திர ஜெயின் கூறும் போது, ‘‘எங்களிடம் போதிய தடுப் பூசிகள் கையிருப்பில் இல்லை. 1.34 கோடி தடுப்பூசிகளை வாங்க உள்ளோம். அதன்பிறகே 18 வய துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்’’ என்றார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘‘எங்களிடம் போதுமான தடுப்பூசிகள் இல்லை. சீரம், பாரத் பயோ டெக் நிறுவனங் களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’’ என தெரிவித்தார்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறும்போது, ‘‘மே 15-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோ ருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படும்’’ என்று தெரி வித்தார்.

இதேபோல ஆந்திரா, தெலங் கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கேரளா, ஒடிசா, பிஹார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் கரோனா தடுப் பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த மாநிலங்களிலும் இந்தத் திட்டம் இன்று தொடங்கப் படாது.

தமிழகம்

தமிழக அரசு ஆர்டர் செய்துள்ள 1.50 கோடி தடுப்பூசிகள் வந்தால் தான் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, தமிழக அரசு 1.50 கோடி தடுப்பூசிகளை கொள் முதல் செய்ய ஆர்டர் செய்துள்ளது. இதுவரை எவ்வளவு தடுப்பூசிகள் கிடைக்கும் என்ற தகவல் வர வில்லை. தடுப்பூசி கிடைத்தால்தான் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங் கப்படும்’’ என்றார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459