சென்னை: தமிழகத்தில் தினமும் 30 ஆயிரம் பேர் கூட வேக்சின் கூட முன் வராமல் இருந்த நிலையில், திடீரென நேற்று ஒரே நாளில் 1.60 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேக்சின் போடப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு நேற்று ஒரே நாளில் வேக்சின் வழங்குவதில் புதிய சாதனை படைத்துள்ளது.இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்தாலும் கூட மக்கள் பலர் வேக்சின் போட முன் வருவது இல்லை. அதிலும் தமிழகம் வேக்சின் போடுவதில் பெரிய அளவில் பின்தங்கி இருக்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து போதிய வேக்சின் கிடைக்காதது ஒரு காரணம்.இன்னொரு பக்கம் கிடைக்கும் வேக்சினை கூட போட்டுக்கொள்ள மக்கள் பல முன் வராதது இன்னொரு காரணம்,. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வேக்சின் வழங்குவது திடீரென உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட பலர் வேக்சின் போட முதலில் முன்வரவில்லை என்றுதான் கூற வேண்டும். வேக்சின் மீது பெரிய அளவில் அச்சம் இருந்தது. பொய்யான வாட்ஸ் ஆப் வதந்திகள் காரணமாகவும், யூ டியூபில் பரவும் வதந்தி வீடியோக்கள் காரணமாகவும், வேக்சினை நம்பாமல் மக்கள் வீட்டுக்கு உள்ளேயே முடங்கி கிடந்தனர். வீடு தேடி வேக்சின் போட சென்றாலும் கூட மக்கள் வேக்சின் போட முன்வரவில்லை. ராமநாதபுரத்தில் ஒரு கிராமத்தில் வேக்சின் போட அதிகாரிகள் சென்ற போது, மொத்த கிராமமும் அதை எதிர்த்துள்ளது. நர்ஸ்கள் கெஞ்சிய பின், வெறும் 8 பெண்கள் மட்டுமே வேக்சின் போட முன் வந்து இருக்கிறார்கள். அந்த அளவிற்கு வேக்சின் மீது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் அச்சத்துடன் இருக்கிறார்கள். இந்த அச்சத்தை போக்கும் பணியைத்தான் தமிழக அரசு செய்து வருகிறது.அதன்படி மாவட்ட வாரியாக பல திமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மக்களிடையே வேக்சினை குறித்து விழுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். சேப்பாக்கத்தில் எம்எல்ஏ உதயநிதி வீடு வீடாக சென்று வேக்சின் குறித்து பேசுகிறார். மன்னார்குடியில் எம்எல்ஏ டிஆர்பி ராஜா வேக்சின் கேம்ப்கள் அடுத்தடுத்து நடத்தி, நேரடியாக வேக்சின் குறித்து மக்களிடம் பேசி வருகிறார். எம்எல்ஏ டாக்டர் எழிலன் ஆயிரம் விளக்கில் தெரு தெருவாக வேக்சின் குறித்து பேசி வருகிறார்.இதெல்லாம் எடுத்துக்காட்டு மட்டும்தான்.. தமிழகம் முழுக்க திமுக எம்எல்ஏக்களும், ஆட்சியர்களும் தீவிரமாக வேக்சின் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள். முன்பு வேக்சின் போட விரும்பும் மக்களுக்கு வேக்சின் கிடைக்காமல் இருந்தது. தற்போது அதை எளிதாக்கி, பல இலவச வேக்சின் கேம்ப் முகாம்களை தமிழகம் முழுக்க அரசு நடத்தி வருகிறது. உதாரணமாக உங்கள் ஊரில், 10 பேரை நீங்கள் வேக்சின் போட ரெடி செய்தால் போதும். அரசின் வேக்சின் கேம்ப் நேரடியாக உங்கள் ஊருக்கே வந்து வேக்சின் போட்டுவிட்டு செல்லும். தமிழகம் முழுக்க தற்போது ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் நேரடியாக வேக்சின் கேம்ப்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கேரளா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே இப்படி நடக்கும் நிலையில் தமிழகம் அதே மாடலை துரிதமாக செய்து வருகிறது.இந்த நிலையில் தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகான ஆகசிறந்த உதாரணமாக நேற்று ஒரே நாளில் 1,60,465 பேருக்கு கொரானா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கடின உழைப்பும், கடந்த சில நாட்களாக செய்யும் அசர வைக்கும் உழைப்புமே இந்த சாதனைக்கு காரணம். கொரோனா தடுப்பூசி போடப்பட தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுதான் மிக அதிகம். நேற்று பல மாநிலங்களை விட அதிகமாக தமிழகத்தில் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. இதுவரை ஒரே நாளில் வேக்சின் போடப்பட்ட விவரம் மே 19 = 29,338மே 20 = 30,553மே 21 = 32,645மே 22 = 41,689மே 23 = 9,954மே 24 = 73,926மே 25 = 1,60,465தமிழக அரசு வேக்சின் குறித்து தொடர்ந்து செய்யும் பிரச்சாரங்கள் இதற்கு முதற் காரணம். இரண்டாவதாக 18+ வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேக்சின் போட தொடங்கி உள்ளதால் பல இளைஞர்கள் ஆர்வமாக வேக்சின் போட வருகிறார்கள். வேக்சின் கேம்ப்கள் காரணமாக மக்கள் பலர் தொடர்ச்சியாக வேக்சின் போட முன் வருகிறார்கள்.
No comments:
Post a Comment