CBSE - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு . - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/04/2021

CBSE - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு .

 640403


நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு மே 4ம் தேதி தேர்வுகள் தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 7 வரையும், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 15 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அட்டவணையில் சில மாற்றங்களை செய்து சில பாடங்களுக்கான தேர்வுகளை வேறு தேதிக்கு ஒத்தி வைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.
IMG-20210414-WA0013


இதற்கிடையே, நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தொடர்ந்து, இன்று பிற்பகல் 12 மணியளவில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய கல்வித்துறை செயலாளர், மற்றும் பிற முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. 12ம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கான சூழல் குறித்து ஜூன்1ம் தேதி ஆய்வு நடத்தி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை எந்த வகையில் வழங்குவது என்பது பற்றி சிபிஎஸ்இ முடிவு செய்யும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459