இந்தச் சூழ்நிலையில், ஆக்ஸிஜன் குறைபாட்டுக்கு எந்த மாதிரியான உடனடி உதவிகளை எடுத்துக்கொள்ளலாம் என வாட்ஸ் அப்பிலும் ஃபார்வேர்டுகள் பரவிவருகின்றன
அப்படியொரு வாட்ஸ்அப் மெசேஜ் லவங்கம், ஓமம், கற்பூரம் மற்றும் யூக்கலிப்டஸ் எண்ணெய் இவற்றைச் சேர்த்து ஒன்றாக்க் கட்டி மோந்துவர உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். இந்த மருத்துவம் பேரிடர் காலங்களில் மிக பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிடுகிறது. இதன் உண்மைத் தன்மையை அறிய சித்த மருத்துவர் விக்ரம் குமார் அவர்களைத் தொடர்பு கொண்டோம்.இயல்பிலேயே, லவங்கம், ஓமம், கற்பூரம், யூகலிப்டஸ் எண்ணெய் இவற்றுக்கு நுரையீரல் பாதையைச் சீராக்கும் செயல்திறன் உண்டு. மூச்சும் சீராகும். இவற்றை ஒன்றாக சேர்த்துக் கட்டி மோந்துவருவது பலனைக் கொடுக்கும். அதே வேளை, சிலவற்றை நினைவில் கொள்வதும் அவசியம்.
இவற்றை துணியில் சேர்த்து பொட்டலம் போல கட்டியும் பயன்படுத்தலாம் மாஸ்க்கில் வைத்தும் அணிந்துகொள்ளலாம். அப்படி, மாஸ்க்கில் வைத்துப் பயன்படுத்தும்போது கற்பூரத்தின் அளவு குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் ஓவர்டோஸ் ஆக மாறினால் கற்பூரம் விஷத்தன்மையை ஏற்படுத்தலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போதும் கற்பூரத்தின் அளவு குறைவாகவே இருக்கவேண்டும். வீடுகளில் நாமே செய்து பயன்படுத்துவதால் இவற்றின் அளவில் கவனம் இருப்பது அவசியம். நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும். அதே வேளை, ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டால் இதை மட்டுமே செய்தாலே போதும் என இருந்துவிட கூடாது.ஆக்ஸிஜன் குறைபாடு தீவிரமடையும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனையை எடுத்துக்கொள்வது மிக அவசியம்.திடீர் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படும் பட்சத்தில் இந்த மருத்துவத்தை துணைக்கு வைத்துக்கொள்ளலாமே தவிர இதுவே தீர்வு என மக்கள் அலட்சியமாக இருந்து விடக் கூடாது என்கிறார் அவர்.
No comments:
Post a Comment