தேர்தல் பணிக்கு என்.சி.சி.,மாணவர்கள் செல்வதற்கு, திடீர் தடை - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/04/2021

தேர்தல் பணிக்கு என்.சி.சி.,மாணவர்கள் செல்வதற்கு, திடீர் தடை

 


மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் ஓட்டுச் சாவடிக்கு வரும்போது, அவர்களுக்கு உதவும் வகையில், மாணவர்களை பயன்படுத்த தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது. அதாவது, என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மாணவர்களை, தன்னார்வப் பணியில் நியமிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை உத்தரவை காட்டி, என்.சி.சி., மாணவர்களை தேர்தல் பணிக்கு அனுப்புவது, பல மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.


இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:என்.சி.சி., மாணவர்களை தேர்தல் தன்னார்வ பணிக்கு நியமிக்க வேண்டாம் என, 2019 பார்லிமென்ட் தேர்தலின் போது, மத்திய பாதுகாப்பு துறை சார்பில், தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு நாளில், ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டாலோ, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலோ, அதை சமாளிக்கும் பக்குவம், சிறிய வயது மாணவர்களுக்கு இல்லை என, அதில் காரணம் கூறப்பட்டுள்ளது. எனவே, என்.சி.சி., மாணவர்களை தன்னார்வப் பணிக்கு நியமிப்பதை நிறுத்தியுள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459