*
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்கள், அவர்களுக்கு தேர்தல் பயிற்சி நடைபெறும் மையத்திலேயே தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்
* வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் இதர காரணங்களுக்காக வெளிநாடு சென்று அந்நாட்டின் குடியுரிமை பெறாத இந்திய குடிமக்கள் தங்களுடைய வாக்குகளை இந்திய தூதரகத்தின் அனுமதியுடன் தபால் வாக்குகளாக பதிவு செய்யலாம்
* ராணுவ பணியாளர்கள், ராணுவ உயர் அதிகாரிகளின் சான்றதழை பெற்று தனது தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அஞ்சல் மூலம் தங்களுடைய தபால் வாக்குகளை அனுப்பி வைக்கலாம்
* கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அல்லது வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவோரும், தனிமைப் படுத்தப்பட்ட பகுதிக்குள் இருப்போரும் சம்பந்தபட்ட சுகாதார அதிகாரிகளின் சான்றிதழை பெற்று தபால் வாக்களிக்கலாம்
* மாற்றுத்திறனாளிகள் சம்பந்தபட்ட மாநில அரசின் உரிய அதிகாரியிடமிருந்து சான்றிதழை பெற்று தங்களுடைய வாக்குகளை தபால் வாக்குகளாக பதிவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது
* மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தபால் வாக்களிக்க விரும்புவோர்களின் வீடுகளுக்கு வாக்குச் சாவடி அலுவலர்கள் நேரில் சென்று விவரங்களை சேகரித்து சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலை பெற்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்குவர்
* தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தவர்களின் படிவத்தில் குறிப்பிடப்பட தொலை பேசி எண்ணில் குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்கப்பட்டு வாக்காளர்களை அணுகும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குகளை சேகரிப்பார்கள்
* தபால் வாக்குகள் சேகரிக்கப்படும் போது சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். வேட்பாளர்கள் பார்வையிட அனுமதியும் வழங்கப்படும்
* எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதில் யாரும் செல்வாக்கு செலுத்தாமல் இருப்பதை உறுதி செய்து வாக்களிப்பின் ரகசிய தன்மைய பாதுகாப்பது தேர்தல் அதிகாரிகளின் பொறுப்பாகும்
* தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணி வாக்குப்பதிவு நடைபெறும் தேதிக்கு ஒருநாள் முன்னதாக முடிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுருத்தியுள்ளது
No comments:
Post a Comment