சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சாவடி பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, தேர்தலுக்கு மறுநாள் விடுப்பு வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல், நாளை மறுநாள் நடக்கிறது. மாநிலம் முழுதும் ஒரே கட்டமாக நடத்தப்படும் இந்த தேர்தலில், தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஓட்டுச் சாவடியில், தலைமை அதிகாரி மற்றும் அலுவலர்கள், நாளை முதல், பணிக்கு செல்கின்றனர். அவர்கள் தேர்தல் பணிகளை முடித்து, மின்னணு ஓட்டு பெட்டிகளை, தேர்தல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க, மறுநாள் காலை வரை அவகாசம் தேவை. எனவே, ஏப்.,7 காலை, தேர்தல் பணி முடிந்து, வீட்டுக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அன்றைய நாளில் பணிக்கு வர முடியாத நிலை உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, ஏப்.,7ம் தேதி விடுப்பு அளிக்க வேண்டும் என, பள்ளி கல்வி துறை மற்றும் பிற துறைகளுக்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment