லேசான கொரோனா பாதிப்பு உடையவர்கள்.. வீட்டிலிருந்தபடியே சமாளிப்பது எப்படி.. பின்பற்ற வேண்டியவை என்ன? - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/04/2021

லேசான கொரோனா பாதிப்பு உடையவர்கள்.. வீட்டிலிருந்தபடியே சமாளிப்பது எப்படி.. பின்பற்ற வேண்டியவை என்ன?


சென்னை: ஒருவருக்கு லேசான கொரோனா பாதிப்புகள் இருந்தால், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட சில நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கொரோனாவை எளிதில் வெற்றி கொள்ளலாம்.இந்தியாவில், கொரோனா பரவலின் இரண்டாம் இலை தற்போது ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் மூன்று லட்சத்தை நெருங்குகிறது. வரும் காலங்களில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மேலும் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அடுத்த மாதம் மாதம் கொரோனா இரண்டாம் அலை உச்சம் பெறும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். டெல்லியில் நீதிபதிகளுக்கு கொரோனா சிகிச்சை... ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் 100 அறைகள் தயார்கொரோனா பரவல்அதாவது வரும் காலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே, நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும் என அவசியம் இல்லை. லேசான கொரோனா பாதிப்பு உடையவர்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும்.கொரோனா அறிகுறிகள்முதலில் ஒருவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு, பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல், தொண்டை புண், இருமல், சுவாசிப்பதில் சிரமம், தலைவலி, உடல் வலி, வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவை முக்கிய கொரோனா அறிகுறிகளாக உள்ளன. சுற்றியுள்ளவர்களைக் காக்க நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் முறையாக மாஸ்க்குகளை அணிய வேண்டும்.தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்கொரோனா உறுதி செய்யப்பட்டால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வெடுங்கள். தினசரி 3- 4 முறை ஆக்சிமீட்டரில் உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்யுங்கள். காற்றோட்டத்திற்கு ஜன்னல்களை திறந்து வைக்கலாம். உடலில் போதிய நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்யுங்கள். தேவைப்பட்டால் காய்ச்சல் பராசிட்டமால், அசிடமினோபன் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் .ஆக்சிஜன் அளவு 92% மேல் இருந்தால்நுரையீரலுக்கு போதிய ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யக் குப்புறப் படுத்து மூச்சுவிடுங்கள். அறிகுறிகள் மேம்படும் வரை() இரண்டு பஃப்ஸ் விகிதம் தினமும் இரண்டு முறை எடுத்துக்கொள்ளுங்கள். உடலில் போதிய நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்யுங்கள். தேவைப்பட்டால் காய்ச்சல் பராசிட்டமால். அசிடமினோபன் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் .ஆக்சிஜன் அளவு 92%-க்கு கீழ் குறைந்தால்உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும். சிகிச்சையின் போது, நூரையீலுக்கு செல்லும் ஆக்சிஜனை அதிகரிக்க குப்புறப் படுத்து மூச்சுவிடுங்கள். மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்தலாம். மேலும், தினசரி 4 - 5 முறை ரத்த ஆக்சிஜன் அளவு செக் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் 5-10 நாட்களுக்கு6 () மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.ரெம்டெசிவிர்ரெம்டெசிவிர் மருந்து கொரோனா அறிகுறிகளைக் குறைக்கலாம். ஆனால் உயிரிழப்பதற்கான அபாயத்தைக் குறைக்காது. மருத்துவரின் ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும், ரத்த ஆக்சிஜன் அளவு குறையும் நோயாளிகளுக்கு வழங்கப்படும். டசிசுமாப் () - மருத்துவமனையில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர் மேற்பார்வையுடன் கொடுக்கப்பட வேண்டும்.'! 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459