நீங்கள் வாக்குச்சாவடி அலுவலரா? அப்படியெனில் இந்த 50 கேள்விகளை படித்து விடையினை தெரிந்துகொள்ளுங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/04/2021

நீங்கள் வாக்குச்சாவடி அலுவலரா? அப்படியெனில் இந்த 50 கேள்விகளை படித்து விடையினை தெரிந்துகொள்ளுங்கள்

 images%2528144%2529


வாக்குச்சாவடி அலுவலர்களே (PO,PO1,PO2,PO3) நீங்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய தேர்தல் பணி தொடர்பான 50 கேள்விகள் மற்றும் பதில்கள் தமிழில் கண்டிப்பாக ஒரு முறையாவது படியிங்கள் உங்கள் பணி எளிமையாக அமையும்:


கேள்விகள் :


1 . வாக்குப்பதிவு நேரம் என்ன ? 

2.மாதிரி வாக்குப்பதிவு துவங்குவதற்கு வேட்பாளர் முகவர்களுக்காக எவ்வளவு நேரம் வரை காத்திருக்கலாம் ?

3. வாக்குப்பதிவின் போது உணவு இடைவேளை உண்டா ? 

4.வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தன்னுடைய பணியினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் போது அவருடைய பணியை செய்வது யார் ?

5. Control Unit- ஐ On செய்த உடன் VVPAT கருவியில் எத்தனை Slip- கள் வரும் ? 

6 . ஒரு வாக்குச்சாவடிக்கு எத்தனை Tender Ballot Papers வழங்கப்படும் ? 

7. ) மாதிரி வாக்குப்பதிவில் 50 வாக்குகள் பதிவு செய்த பிறகு எந்த Button- ஐ அழுத்தி வாக்குப்பதிவினை முடிக்க வேண்டும் ? 

8 . வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் 17A பதிவேட்டில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் என்ன செய்ய வேண்டும் ? 

9 . White Master Cover- ல் என்னென்ன பொருட்கள் வைக்கப்பட வேண்டும் ? 

10. மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் Presiding Officer தயாரிக்க வேண்டிய படிவம் எது ? 

11. மாதிரி வாக்குப்பதிவினை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் ? 

12. மாதிரி வாக்குப்பதிவின் போது வெளியான Mock Poll Slip- களை எவ்வாறு சீலிட வேண்டும் ?. 

13. வாக்குப்பதிவிற்கு அடையாள ஆவணமாக Voter Information Slip- ஐ பயன்படுத்தலாமா ? 

14. ASD பட்டியலில் உள்ள ஒரு வாக்காளர் வாக்களிக்க வந்தால் , என்ன செய்ய வேண்டும் ? 

15. வாக்காளர் பட்டியலின் குறியிடப்பட்ட நகலினை ( Marked Copy ) பராமரிக்கும் அலுவலர் யார் ? 

16. முகவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் எவ்வாறு அடையாளம் காணப்படுவர் ? 

17. எந்த தருணத்தில் 17A பதிவேட்டில் அடையாள ஆவணத்தின் கடைசி நான்கு இலக்கங்களை பதிவு செய்ய வேண்டும் ? 

18. மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் VVPAT- ல் எந்த பாகத்தினை சீலிட வேண்டும் ? 

19. மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் Control Unit- ல் எத்தனை சீல்கள் இடப்பட வேண்டும் ? 

20. 17A Register- ஐ எந்த அலுவலர் பராமரிப்பார் ? 

21. வேட்பாளரின் முகவர்களை எந்த வரிசையில் அமர வைக்க வேண்டும் ? 

22. வாக்குப்பதிவின் போது VVPAT- ல் பழுது ஏற்பட்டு VVPAT- ஐ மாற்ற நேரிடும் தருணத்தில் , மீண்டும் மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டுமா ?

23. வாக்குப்பதிவு நாளன்று மாதிரி வாக்குப்பதிவானது இரண்டாவது முறையாக எந்த நேரத்தில் நடத்தப்பட வேண்டும் ? அப்போது எத்தனை வாக்குகள் பதிவு செய்ய வேண்டும் ? 

24. வாக்குச்சாவடிக்கு எத்தனை வாக்காளர் பட்டியல் வழங்கப்பட வேண்டும் ? 

25. வாக்குப்பதிவின் போது கண்பார்வையற்ற / இயலாத வாக்காளர்களுக்கு துணையாக வரும் நபருக்கு அழியா மை வைக்க வேண்டுமா ? 

26. வாக்குப்பதிவின் போது கண்பார்வையற்ற / இயலாத வாக்காளர்களுக்கு துணையாக வரும் நபரிடம் உறுதிமொழி பெற வேண்டுமா ? எந்த படிவத்தில் அதை பதிவு செய்ய வேண்டும் ? 

27. வாக்குச்சாவடிக்கு வரும் ஒரு வாக்காளரை இவர் சரியான வாக்காளர் இல்லையென வாக்குச்சாவடி முகவர் மறுப்பு தெரிவிக்கும் போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர் என்ன செய்ய வேண்டும் ? 

28. வாக்குச்சாவடி முகவர்களை எந்த படிவத்தின் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் ? 

29 , VVPAT -ஐ வாக்குப்பதிவு நாளில் பயன்படுத்தும் போது பின்புறம் உள்ள Transportation Switch எந்த Position ல் இருக்க வேண்டும் ? 

30. Visit Sheet- ன் பொறுப்பு அதிகாரி யார் ? 

31. வாக்குச்சாவடி முகவர்கள் எங்கு வாக்காளராக இருக்க வேண்டும் ? 

32. PO - 3 வழங்கும் Voter Slip- ல் என்னென்ன விவரங்கள் இருக்கும் ? 

33. மாதிரி வாக்குப்பதிவு நடக்கும் போது , BU / CU / VVPAT- ல் பழுதுகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ? 

34. வாக்குப்பதிவு ஆரம்பித்த பின் VVPAT- ல் மட்டும் பழுது ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ? 

35. முக்கிய பிரமுகர்கள் வாக்களிக்கும் போது Voting Compartment- க்குள் பத்திரிக்கை நிருபர்களை அனுமதிக்கலாமா ? 

36. வாக்குச்சாவடிக்குள் காவல் அலுவலர்கள் நுழைய அனுமதி உண்டா ? 

37. வாக்குப்பதிவு முடிந்தவுடன் எந்தெந்த ஆவணங்களில் கருவிகளில் உள்ள மொத்த வாக்கு எண்ணிக்கை இணையாக இருக்க வேண்டும் ? 

38. படிவம் -17 C- எத்தனை நகல்கள் தயார் செய்ய வேண்டும் ? 

39 . Tendered Ballot Paper ல் எவ்வாறு வாக்களிப்பது ? 

40. கட்டுப்பாட்டு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை அழிந்துள்ளதை எவ்வாறு உறுதி செய்ய வேண்டும் ? 

41. மாதிரி வாக்குப்பதிவு சான்றில் யார் கையொப்பமிட வேண்டும் ? 

42. ஒரு வாக்காளர் 17A பதிவேட்டில் கையொப்பமிட்டு , விரலில் மை வைத்த பின் வாக்களிக்காமல் வெளியில் சென்றுவிட்டால் , அதற்கு வாக்குச்சாவடி அலுவலர் என்ன செய்ய வேண்டும் . ? 

43. இரண்டு கைகளிலும் , விரல்கள் இல்லாதவர்களுக்கு 17A- பதிவேட்டில் கைரேகை வைக்க நேர்ந்தால் எத்தகைய நடைமுறை பின்பற்ற வேண்டும் ? 

44 . EDC கொண்டு வரும் பணியாளர் வாக்களிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன ? 

45. வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 7.00 மணிக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் என்ன பணிகள் செய்ய வேண்டும் ? 

46. வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட Web Casting Memory Card- ஐ என்ன செய்ய வேண்டும் . 

47. குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெண் வாக்காளர்களை குறிக்கும் முறை என்ன ? 

48. ஒரு வாக்குச்சாவடிக்கு கோவிட் -19 பாதுகாப்பிற்காக சானிடைசர் - 500 மி.லி பாட்டில் எத்தனை வழங்கப்படும் ? அது யாருடைய பயன்பாட்டிற்கானது ? 

49. தலைமை அலுவலர் எந்த தருணங்களில் Voting Compartment- க்குள் செல்லலாம் ? 

50. வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் முகக்கவசம் விநியோகிக்கப்பட வேண்டுமா ?


Election Preparation Question Answer - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459