உலக வரிசை கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் .. ஒரே நாளில் 2,761 பேர் உயிரிழப்பு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/04/2021

உலக வரிசை கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் .. ஒரே நாளில் 2,761 பேர் உயிரிழப்பு!


வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடம் பிடித்து தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,49,313 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 2,761 பேர் உயிரிழந்துள்ளனர்.பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 70,105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 2,986 பேர் உயிரிழந்துள்ளனர். ஜஸ்ட்.. 24 மணி நேரம்தான்.. 3 போலீஸாரை காவு வாங்கிய கொரோனா.. கதி கலங்கும் சென்னை காவல்துறை..!கொரோனா அதிகரிப்புஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பராசபட்சம் இல்லாமல் கொரோனா தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 147,041,550 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 3,112,314 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 125,041,307 பேர் குணமடைந்துள்ளனர்.பிரேசிலில் அதிக உயிரிழப்புஅமெரிக்காவில் கொரோனா கொஞ்சம் ஓய்வு எடுத்து வருகிறது. அங்கு 52,603 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 741 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் தொடர்ந்து அதிக உயிழப்பு வருகிறது. அங்கு ஒரே நாளில் 70,105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,986 பேர் கொரோனாவால்;இறந்துள்ளனர்.இந்தியாவின் ஆதிக்கம்இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து அடங்காமல் ஆட்டம் போட்டு வருகிறது. உலகளவில் கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உச்சபட்ச அளவாக 349,313 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 2,761 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2,681,378 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இந்தியாவில் இதுவரை 16,951,769 பேர் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 2,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் மேலும் 32 பேர் பலியாகியுள்ளனர்.துருக்கியிலும் அதிக பாதிப்புபிரான்சில் 32,633 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 217 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 13,817 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவால் மேலும் 322 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 8,828 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு 399 பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 15,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 181 பேர் உயிரிழந்துள்ளனர்.துருக்கி நிலையும் மோசமாகி வருகிறது. அங்கு மேலும் 40,596 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 339 பேர் பலியாகியுள்ளனர்.'

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459