தமிழகத்தில் 15 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.. 9 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/04/2021

தமிழகத்தில் 15 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.. 9 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்!


சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 14,842 பேருக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரே நாளில் 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிடுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,842 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கும் தொடரும்.. தமிழக அரசுகுணமாதல்தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,66,329 ஆகும். இன்று ஒரே நாளில் 9,142 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது வரை 9,52,186 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா பரிசோதனைதமிழகத்தில் இன்று 1,00,668 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று ஒரே நாளில் 1,25,718 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2,18,80,174 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.புதிய பாதிப்புஇன்று ஒரே நாளில் 1,22,671 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 2,15,25,113 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய நிலவரப்படி 8,874 ஆண்களுக்கும், 5,968 பெண்களுக்கும் கொரோனா புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வீடு திரும்பியவர்கள்இன்று ஒரே நாளில் 9,142 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள். இதுவரை 9,52,186 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். தமிழகத்தில் 263 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இன்று ஒரே நாளில் 80 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். இதுவரை 13,475 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.'

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459