பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தையின் பெயரை, பிறப்பு பதிவு செய்த நாளில் இருந்து, 12 மாதம் வரை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். கடந்த, 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் அனைத்திற்கும், 2024ஆம் ஆண்டு வரை, பெயருடன் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தவறும்பட்சத்தில் காலதாமத கட்டணம் செலுத்தி பெயர் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். ஒருமுறை பதிவு செய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இதுகுறித்த விழிப்புணர்வை, பெற்றோர் அல்லது காப்பாளரிடம் ஏற்படுத்துவது அவசியம். மாணவர் சேர்க்கையின்போது பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment