.
டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளிப்பவர்கள், குற்ற வழக்குகளை மறைப்பவர்களை பணித்தேர்வில் நிராகரிப்பது தவறில்லை என உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 88 அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை தேர்வு செய்ய 2013-ல் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த மங்கலநாதன் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவரது தேர்வு ரத்து செய்யப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை மறைத்ததற்காக மங்கலநாதன் ஒரு ஆண்டுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் பங்கேற்க தடை விதித்தும் டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது.
இதை ரத்து செய்யக்கோரி அவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காரன் விசாரித்தார்.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் மீதான 2 வழக்குகளில் ஒரு வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கை ரத்து செய்துவிட்டது என்றார்.
No comments:
Post a Comment