சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி () ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அதன் மீது வட்டி விதிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அவசர காலத்திற்கு பயன்படும் ஒரு அற்புதமான சேமிப்பு என்று பார்க்கப்பட்டு வருகிறது. 1968ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு இந்த திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் வருங்கால வைப்பு நிதியில் பங்களிக்க முடியும். ஒரு நிதியாண்டுக்குள் இந்த அளவு தொகை கூட போடப்படவில்லை என்றால் அந்த கணக்கு நிறுத்தப்படும்.வருங்கால வைப்பு நிதிஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை மற்றும் நிறுவனங்கள் அவர்கள் பங்குக்கு வழங்கும் தொகையை சேர்த்து வருங்கால வைப்பு நிதியாக சேமிக்கப்படுகிறது. முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். ஆனால் மேற்கொண்டு 5 வருடங்கள் வரை நீட்டிக்கவும் வழி உள்ளது.நல்ல வட்டித் தொகைஅதேநேரம், மருத்துவம், கல்வி அல்லது திருமணம் உள்ளிட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தேவைப்படும் அவசரகால செலவுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட தொகையை இதில் இருந்து முன்கூட்டியே எடுத்துக் கொள்ளலாம். மேலும் வருங்கால வைப்பு நிதி மீது தற்போது 8.5% வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி தொகையும் வைப்புநிதியில் வரவு வைத்துக் கொள்ளப்படும்.தொழிலாளர்கள் அதிர்ச்சிஅதிக வட்டி தரக்கூடிய சேமிப்பு திட்டங்களில் இதுவும் ஒன்று என்பதால் தொழிலாளர்கள் சற்று நிம்மதியாக இருந்தனர். ஆனால் 2021-22ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த நிம்மதிக்கு வேட்டு வைக்கப்பட்டுவிட்டது. ஆண்டுக்கு இரண்டரை லட்சத்துக்கும் மேல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் வரவு வைக்கப்படும் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.தானாக முன்வந்து சேமிப்புஇப்போது ஈபிஎஃப் மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு, வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. சில ஊழியர்கள் பிஎப்புக்கு அதிக நிதியை செலுத்தி வருகிறார்கள். அதாவது தானாக முன்வந்து வாலின்டரி அடிப்படையில் அதிக தொகையை பிஎப் நிதியத்திற்கு ஊழியர்களில் சிலர் செலுத்த முன் வருகிறார்கள். இதன் மூலம் வரிச் சலுகையை பெறுகிறார்கள். எனவே அவர்களின் இந்த முயற்சிக்கு முட்டுக் கட்டை போட்டு அதிலிருந்து வரி வருவாயை பெற மத்திய அரசு இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறது.அதிக ஊதியம்ஒரு வருடத்திற்கு 2.5 லட்சம் அளவுக்கு பிஎப் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றால், மாதத்திற்கு குறைந்தது, ரூ.20,000த்திற்கு மேல் பணம் செலுத்தப்பட வேண்டும். எனவே அதிக சம்பளம் பெறுவோர், கணிசமான ஐடி ஊழியர்கள், இந்த வரி விதிப்பால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் வருங்காலத்தில் பிற ஊதியதாரர்களின் பிஎப் கணக்கிற்கும் வட்டி வசூலிக்கப்படுமோ என்ற அச்சம் தொழிலாளர் சமூகத்தில் எழுந்துள்ளதை மறுக்க முடியாது.சேமிப்புகளுக்கு ஊக்கம் தேவைபிஎப் மட்டுமல்ல, யூனிட் லிங்க் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழும் () ரூ.2.5 லட்சத்திற்கு மேற்பட்ட, முதலீடுகளுக்கு வட்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேமிப்புகளுக்கு வட்டி வசூலிப்பது மக்களுக்கு சேமிப்பு மீதான ஆர்வத்தை குறைத்துவிடும். இது அவசர காலத்தில் மக்களை கந்து வட்டிக்காரர்களிடம் கையேந்த வைத்ததுவிடும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.'! (?)
.
No comments:
Post a Comment