கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/02/2021

கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

 


சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு  சங்கங்களின் அனைத்து தற்காலிக ஊழியர்களையும்  பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களான தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி  வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்  கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் சிறப்பு அரசு வழக்குரைஞர்கள் பால ரமேஷ் எல்.பி. சண்முகசுந்தரம், மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் சி.பிரகாசம் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர். 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், கூட்டுறவு சங்கங்களில்  தற்காலிகமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்த கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடராத தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில்  பணியாற்றும்  தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவை 8 வாரத்தில் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459