பணி நியமன ஆணை வழங்கக்கோரி எடப்பாடி வீட்டை ஆசிரியர்கள் முற்றுகை - ஆசிரியர் மலர்

Latest

 




03/02/2021

பணி நியமன ஆணை வழங்கக்கோரி எடப்பாடி வீட்டை ஆசிரியர்கள் முற்றுகை

 IMG_20210203_070530


சான்று சரிபார்ப்பு முடிந்த பிறகும் பணி நியமன ஆணைகள் வழங்காததால், முதல்வர் எடப்பாடி வீட்டின் முன் நேற்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.  தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2018-19ம் ஆண்டில் ஏற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டு வெளியிடப்பட்டது. கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு சான்று சரிபார்ப்பு இறுதியாக கடந்த மாதம் 5ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கு பிறகு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கான தெரிவுப் பட்டியலையும் கல்லூரிக் கல்வி இயக்ககம் தயாரித்துள்ளது. ஆனால் பணி நியமன ஆணைகளை இதுவரை வழங்கவில்லை.


இதை கண்டித்தும், பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்கக்கோரியும் 100க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடு உள்ள பசுமைச்சாலையில் ஒன்று திரண்டனர். அப்போது, கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி முதல்வர் வீட்டை முற்றுகையிடவும் முயன்றனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459