சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பதாகையின் கீழ், பலகட்ட சந்திப்பு, முறையீடுகள் பலனளிக்காத பின்னணியில், அரசு ஊழியர்கள் பிப்ரவரி 2, 2021 முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முக்கியக் கோரிக்கைகளாக புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது, நிரப்பப்படாத காலியிடங்கள், தொகுப்பூதியம்- மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்க்கு காலமுறை ஊதியம், முடக்கப்பட்ட பஞ்சப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் தொகை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.ஐந்து நாட்களாக போராடும் அரசு ஊழியர்களை அழைத்து பேச முதல்வர் இதுவரை முன்வரவில்லை. ஆகவே, அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவிப்பதோடு, தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment