முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




13/02/2021

முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு.

 IMG_20210212_163240


அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் / பள்ளித்துணைஆய்வாளர் / ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -2 ல் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க 01.01.2021 நிலவரப்படியான தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல் பார்வையில்காண் இவ்வலுவலக செயல்முறைகளின்படிவெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பார்வையில் காணும் செயல்முறைகள் வாயிலாக அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்குவதற்கான பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் கலந்தாய்வு கீழே அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பாடவாரியாக வரிசை எண்ணில் உள்ள நபர்களுக்கு மட்டும் நடைபெற உள்ளது . இக்கலந்தாய்வில் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 1 மணிநேரம் ( 9 மணிக்கு ) முன்னதாக கலந்தாய்வு நடைபெறும் சென்னை -31 சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு , எம்.சி.சி.மேல்நிலைப்பள்ளியில் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் தகவல் தெரிவித்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேற்காண் கலந்தாய்வில் கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல் வரிசை எண்ணில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும் , அவ்வாறு கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களில் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( மேநிக ) அவர்களால் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் எனவும் , தனியர் முதுகலை ஆசிரியர் பதவியில் பணியில் சேர விருப்பம் இல்லை எனில் தற்காலிக / நிரந்த உரிமைவிடல் உடனடியாக சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளிக்கவேண்டும்.


PG Promotion Counselling Date & Proceedings - Download here...


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459