நெட் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/02/2021

நெட் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு இன்று முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடக்கிறது.

கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாகவும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராகப் பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் இத்தேர்வு உள்ளது.

கடந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் காரணமாகத் தேர்வு தொடர்ந்து 2 முறை தள்ளி வைக்கப்பட்டு, நவம்பர் மாதம் 19, 21, 26 மற்று 30-ம் தேதிகளில் நடைபெற்றது.


இந்நிலையில் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மே மாதம் 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்வுக்ள் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு இன்று முதல் தேர்வர்கள் மார்ச் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கணினி வழியில் நடைபெற உள்ள தேர்வை, என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இரண்டு தாள்களாக நடைபெற உள்ள தேர்வில் முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கும் இரண்டாவது தாளில் 200 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். இரண்டு ஷிஃப்டுகளாகத் தலா 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவலுக்கு: https://ugcnet.nta.nic.in/WebInfo/Page/Page?PageId=1&LangId=P

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459