அரசு பள்ளி மாணவருக்கு ஷூ : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




07/02/2021

அரசு பள்ளி மாணவருக்கு ஷூ : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 senkottaian


தமிழகத்தில், 75 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.திருப்பூரில், 6 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதில், முதலிபாளையம் துவக்க பள்ளி நடுநிலை பள்ளியாகவும், மங்கலம் நடுநிலைப்பள்ளி உயர்நிலையாகவும், பெருமாநல்லுார் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.அமைச்சர் செங்கோட்டையன், பேசுகையில், ''திருப்பூர் அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பிற மாநிலங்கள் வியக்கும் அளவுக்கு தமிழக கல்வித்துறை பல திட்டங்களை கொண்டுவந்துள்ளது.


குறிப்பாக, 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மூலம், 435 அரசு பள்ளி மாணவ, மாணவியர் மருத்துவ கல்வி பயின்று வருகின்றனர். அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் செருப்புக்கு பதில்,ஷூ வழங்கப்படும்.ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 'டேப்' வழங்கப்பட உள்ளது. வரும் காலங்களில் கரும்பலகை இல்லாதவாறு அனைத்து வகுப்புகளுக்கு 'ஸ்மார்ட் போர்டு' வழங்கப்படும். தனியார் பள்ளிக்கு இனணயாக சீருடை வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.அமைச்சர் ராதாகிருஷ்ணன் குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கினார். எம்.எல்.ஏ.,கள் நடராஜன், விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் நரேந்திரன், சிவகுமார், பழனிசாமி, நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459