முதுகலைப் படிப்புகளுக்கான உதவித் தொகை : AICTE அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




24/02/2021

முதுகலைப் படிப்புகளுக்கான உதவித் தொகை : AICTE அறிவிப்பு

 .


முதுகலைப் படிப்புகளுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இதற்கு பிப்ரவரி 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கேட் (GATE) அல்லது ஜிபேட் (GPAT) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்க மாணவர்களுக்கு வழங்கப்படும். உதவித் தொகைத் திட்டத்துக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.12,400 வழங்கப்படும். இந்த சரியாக 24 மாதங்களுக்கு வழங்கப்படும். அல்லது வகுப்புகள் தொடங்கி முடியும் நாள் வரை எது குறைவோ அதைக் கணக்கிட்டு வழங்கப்படும்,இதுதொடர்பாக நிறுவனங்கள் தகவல்களைச் சரிபார்க்க மார்ச் 15-ம் தேதி கடைசி நாள் ஆகும். முதுகலை பொறியியல் (எம்.இ.), தொழில்நுட்பம் (எம்.டெக்.), கட்டிடக் கலை (எம்.ஆர்க்.) மற்றும் பார்மசி (எம்.ஃபார்மா) படிப்புகளுக்கு இந்த வழங்கப்படுகிறது.

அரசின் விதிமுறைப்படி மகப்பேறு விடுமுறையை விண்ணப்பதாரர்கள் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல ஒரு கல்வியாண்டுக்கு 15 நாட்கள் பொது விடுமுறை, 30 நாட்கள் மருத்துவ விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459