2,900 கள உதவியாளர் பதவி ஏப்ரலில் உடல் தகுதி தேர்வு - ஆசிரியர் மலர்

Latest

 




26/02/2021

2,900 கள உதவியாளர் பதவி ஏப்ரலில் உடல் தகுதி தேர்வு

 .


கள உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, வரும் ஏப்ரலில், உடல் தகுதி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: வாரியத்தில், 2,900 கள உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள், இணையதளம் வாயிலாக, இம்மாதம், 15 முதல் மார்ச் 16 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.


விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, ஏப்ரலில் உடல்தகுதி தேர்வு நடத்தப்படும். உடல்தகுதி தேர்வு தேதி, விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும், 'www.tangedco.gov.in' என்ற இணையதளத்திலும் பின்னர் தெரிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459