ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் 2020-21 ம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மை / பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு ( SMC/ SMDC) உறுப்பினர்களுக்கான மேலாண்மை திறன் வளர்த்தல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த பயிற்சி இணையதளம் வழியாக அரசு துவக்க , நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 24.12.2020 முதல் 28.12.2020 வரை online வழியாக பயிற்சி வழங்கப்பட்டது
இதனைத்தொடர்ந்து பார்வை 1ல் காண் செயல்முறைகளின்படி பள்ளி மேலாண்மை | பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு ( SMCI SMDC) உறுப்பினர்களுக்கு பள்ளி அளவில் 05.01.2021 , 06.01.2021 மற்றும் 07.01.2021 ஆகிய நாட்களில் ( ஏதேனும் ஒரு நாள் ) கோவிட்- 19 சூழலில் இணையதள வழியாக பயிற்சி அளிக்க அனைத்து அரசு துவக்க நடுநிலை மேல்நிலைப்பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உயர்நிலை மற்றும்
பயிற்சியின் நோக்கங்கள்
அனைவருக்கும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009
குழந்தையின் உரிமைகள் ( Child Rights)
பாலினப்பாகுபாடு
பேரிடர் மேலாண்மை
தரமான கல்வி
கற்றல் விளைவுகள்
உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள்
பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களின் பணிகள் , நிதி பயன்பாடு சார்ந்த வழிகாட்டுதல்
சமூக தணிக்கை ( Social Audit Questionnaire ) பள்ளி மேம்பாட்டுத்திட்டம் ( School Develonent Plan) தயாரித்தல்
துாய்மை பள்ளி மற்றும் நடத்தை மாற்றம் கற்றலில் புதுமைகள்
கோவிட் - 19 சார்ந்த விழிப்புணர்வு தற்காத்தல்,
பயிற்சிக்கான வழிகாட்டுதல்கள் (தொழில்நுட்பம் சார்ந்து கடைபிடிக்க வேண்டியவை)
தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் பள்ளி அளவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் DIKSHA - ல் என்ற இணையதள முகவரியில் சென்று இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
( Reominended browser -google Chrome)
தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் , SMC/SMDC உறுப்பினர்களுக்கு அவர்களது பெயரில் உள்ள gmail id Password பயன்படுத்தி பயிற்சியை மேற்கொள்ள வழிகாட்டுதல் வேண்டும், ( gmail id இல்லாத உறுப்பினர்களுக்கு புதிதாக gmail id தலைமையாசிரியர்களே உருவாக்கி பயிற்சியை மேற்கொள்ளலாம்)
பயிற்சியில் கலந்த கொண்ட பயிற்சியாளர்களின் விவரங்கள் மாநிலத்திலிருந்து EMIS Portal வழியாக கண்காணிக்கப்படும்.
பயிற்சியின் தாக்கம் SMC / SMDC உறுப்பினர்களை சென்று சேர்ந்ததை உறுதிப்படுத்த உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட பின்னூட்டங்களை தலைமையாசிரியர் பொறுப்பில் பராமரித்தல் வேண்டும்
அரசு துவக்க , நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பயிற்சி சார்ந்த புகைப்படம் , காணொளிகளுடன் கூடிய தொகுப்பறிக்கையினையும் பயிற்சியில் பங்கு பெற்ற SMC /SMDC உறுப்பினர்களின் எண்ணிக்கையினையும் EMIS Portal ல் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
No comments:
Post a Comment