JEE ADVANCED EXAM DATE JULY 3 : MINISTER ANNOUNCED - ஆசிரியர் மலர்

Latest

 




08/01/2021

JEE ADVANCED EXAM DATE JULY 3 : MINISTER ANNOUNCED

 


ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் வரும் ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால்

புதுடெல்லி:
நாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்தத் தேர்வு முதன்மைத் தேர்வு, அட்வான்ஸ் தேர்வு என்று இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
ஜேஇஇ தேர்வுகள் 4 முறை நடத்தப்படும் என மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் ஏற்கனவே தெரிவித்திருந்தார். 
இந்நிலையில், முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 3- ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நடைபெறும் என மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459