அரசு ஊழியர்கள் வீட்டு வசதிய குடியிருப்புகளில் வாடகைக்கு குடியேற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஓசூர் வீட்டு வசதி பிரிவின் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி, ரா.எட்வின் சுந்தர்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓசூர் வீட்டு வசதி பிரிவின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள குடியிருப்புகளில் தகுதியான அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள், தருமபுரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களில் உள்ளன.
அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை, ஓசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் பெற்று, சம்பளம் வழங்கும் அலுவலரின் சான்றுடன் சர்ப்பித்து, சம்பள தகுதிக்கேற்ப ‘ஏ’, ‘பி’, ‘சி’, ‘டி’ வகை குடியிருப்புகளில் வாடகைக்கு ஒதுக்கீடு பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment