முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்பிட விரைவில் டிஆர்பி தேர்வு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/01/2021

முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்பிட விரைவில் டிஆர்பி தேர்வு அறிவிப்பு

 IMG_20210118_101925


அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் , வரும் கல்வியாண்டில் ( 2021 2022 ) ஏற்படும் காலியிடங்களையும் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. உத்தேச காலியிடங் களை பள்ளிக்கல்வி இணை இயக்குநரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் , பட்ட தாரி ஆசிரியர் பதவிகளில் ஏற்படும் காலியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் எஞ்சிய 50 சதவீதம் போட்டித்தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் , கடந்த 2018-2019 - ம் கல்வி ஆண்டுக்கான நேரடி காலி பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர்கள் , ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் தேர்வுசெய்யப்பட்டனர்.

 அடுத்த கட்டமாக , 2019-2020 , 2020-2021 ஆகிய கல்வி ஆண்டுகளுக்குரிய காலியிடங்கள் நிரப்பப் பட வேண்டும் . நடப்பு கல்வி ஆண்டில் ( 2020-2021 ) அரசு பள்ளிகளில் புதிதாக 5 லட்சத்து 18 ஆயிரம் பேர் சேர்ந்திருப்பதால் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய காலியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு பணிநியமனம் நடைபெறக்கூடும் . இந்த நிலையில் , முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு கல்வி ஆண்டில் அதாவது 2021 2022 - ம் ஆண்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ( கிரேடு -1 ) பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பு வதற்கான ஆயத்தப் பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ் . கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் , " 2021 2022 - ம் கல்வி ஆண்டில் ஏற்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் ( கிரேடு -1 ) காலிப்பணியிடங்களை நிரப்ப , காலிப்பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டை இ - மெயிலில் அனுப்பிவிட்டு அதன் பிரதியை 18 - ம் தேதி ( இன்று ) நேரடியாக இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும் ” என்று அறிவுறுத்தியுள்ளார் . ஏற்கெனவே , ஏறத்தாழ 3,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் , வரும் கல்வி ஆண்டுக்கான  காலியிடங்களின் விவரமும் கேட்கப்பட்டிருப்பதால் , காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459