சட்டசபை கூட்டத்தொடர், பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை. - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/01/2021

சட்டசபை கூட்டத்தொடர், பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை.



12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்  பணிநிரந்தரம் குறித்து அமைச்சரவை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். 


2012ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்  16549 பகுதிநேர ஆசிரியர்களை 5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமித்தார். 


இதில் 5ஆயிரம்  காலியிடங்களால் ஏற்பட்டு  தற்போது 12ஆயிரம் ஆசிரியர்களே உள்ளனர்.


10வது கல்வியாண்டிலும்  இவர்கள் ரூ7700 சம்பளத்தில் சிரமப்படுகின்றனர்.

மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும்



விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இவர்களின் ஊதியத்தை உயர்த்தி காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும். 


16500 துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்த அரசு, மாணவர்களுக்கு சிறப்பு பாடங்களை  நடத்தும் இந்த  ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.


2017 ஆம் ஆண்டே சட்டசபையில் கல்விஅமைச்சர் செங்கோட்டையன் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை எப்போதே நிரந்தரம் செய்து இருக்க வேண்டும். 


தேர்தலுக்கு முன்பே இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யும் மாபெரும் அறிவிப்பை இந்த அரசு செய்திட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும். 


இதற்காக அரசு தாயுள்ளதுடன் மேலும் மாதம் ஒன்றுக்கு 20 கோடி நிதி ஒதுக்கினாலே போதும். இதை செய்ய அரசு மனசு வைத்தால் போதும். 


ஒவ்வொரு சமயத்திலும் புதிது புதிதாக வெவ்வேறு பிரச்சனைகள் உருவாகி வருகிறது.


இப்போது செய்யாமல் வேறு எப்போது செய்ய முடியும். 


எங்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஒரு முடிவு எடுங்கள்.

இப்படிக்கு

 பகுதிநேர ஆசிரியர்கள் 

Join Telegram group click here



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459