அரசு உதவி பெறும் பள்ளிகளில், பொது தகவல் வழங்கும் அலுவலர்களை நியமித்து, பள்ளி கல்வித்துறை உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




11/01/2021

அரசு உதவி பெறும் பள்ளிகளில், பொது தகவல் வழங்கும் அலுவலர்களை நியமித்து, பள்ளி கல்வித்துறை உத்தரவு.


 அரசு உதவி பெறும் பள்ளிகளில், பொது தகவல் வழங்கும் அலுவலர்களை நியமித்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் உள்ளிட்டவற்றில், தகவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பள்ளி கல்வித்துறையில், வட்டார கல்வி அலுவலகங்கள், மாவட்ட, முதன்மை கல்வி அதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்வி இயக்குனரகத்தில், பல்வேறு பிரிவு இயக்குனரகங்களிலும், தகவல் அலுவலர்கள் உள்ளனர்.


இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு நிறுவனங்களுக்கு இணையாக, அதே விதிகளுடன் இயங்குவதால், அவற்றிலும் பொது தகவல் அலுவலர் வழியே, தகவல்களை தாமதமின்றி தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் செயலர் தான் தகவல்களை வழங்க வேண்டும். இதற்கான உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளதால், அதை பின்பற்ற வேண்டும் என, அரசு உதவி பெறும் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459