செ.கு. எண் : 02 நாள் : 05.01.2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை - 05.1.2021 தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா . இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி , கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது . இலங்கை , சிங்கப்பூர் , மலேசியா , மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது . பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது , இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர் . இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜனவரி 28 ம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை , பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும் , இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் . K. பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர் வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை
மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு தகவலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
Join Telegram : Click here
இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்
No comments:
Post a Comment