தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே எழுத முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மதுரை எம்.பி. வெங்கடேசன், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், இந்த தேர்வு தமிழில் நடத்தப்படும் என ஏற்கனவே மத்திய அரசு உறுதி தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டி இருந்தார். இந்நிலையில், அஞ்சல் சேவை வாரிய உறுப்பினர் சந்தோஷ் குமார் கமிலா, வெங்கடேசனுக்கு எழுதிய பதில் கடிதத்தில், தமிழிலும் தேர்வு எழுதலாம் என்றும் இதுதொடர்பாக அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அறிக்கை வெளியிட்ட எம்.பி. வெங்கடேசன், தமது கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது என்றும், இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகம் என்றும் முன் நிற்கும் என்றும், இது போட்டியாளர்களுக்கு சமதள ஆடுகளத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment