பிளஸ் டூ படிக்கும் அரசுப்பள்ளி மாணவியை ஒரு கிராமமே தங்கள் வீட்டு பெண்ணாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மாணவி செய்த செயல்தான் இதற்கு காரணம். அப்படி என்ன செய்தார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் சிதிலமடைந்த வீடு. வறுமையை சொல்லும் வீட்டுச்சூழல். மனநிலை சரியில்லாத தாய் என பல இன்னல்களுக்கும் இடையே வசிக்கும், ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஜெயலட்சுமியின் பின்னணி இதுதான்.
இந்நிலையில் கடந்த ஆண்டு தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற ஜெயலட்சுமி, அமெரிக்காவின் நாசாவுக்கு செல்ல தேர்வானார். 4 ஆயிரம் பேரில் ஒருவராக தேர்வானாலும், அமெரிக்கா செல்ல பணமில்லாத சூழலில் உதவி கோரினார்.
இதையடுத்து மாணவிக்கு மாவட்ட நிர்வாகமும், சில தொண்டு நிறுவனங்களும் உதவின. அதற்குப்பிறகு கிராமாலயா என்ற தொண்டு நிறுவனமும் உதவி செய்தது. அடுத்தடுத்து உதவிகள் குவிந்த நிலையில் தனக்கு தேவையான உதவி கிடைத்து விட்டது என்று கூறிய மாணவி, அதன் பிறகு கேட்ட உதவிதான் ஊரையே மகிழ வைத்திருக்கிறது. தனது கிராமத்தில் கழிவறை வசதி இல்லாததால் அதற்கு உதவுமாறு கேட்டிருக்கிறார் ஜெயலட்சுமி. அப்படி கேட்டதற்கான காரணத்தையும் அவர் கூறினார்.
ஜெயலட்சுமியின் கோரிக்கையை ஏற்று 126 வீடுகளுக்கு கழிவறை வசதி செய்து கொடுத்துள்ளது அந்த தொண்டு நிறுவனம். இதனால் கிராமத்து பெண்களுக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் தொண்டு நிறுவனத்துக்கும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Click here to view student video
No comments:
Post a Comment