தொழில் மற்றும் வணிகத் துறையில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளின் காலிப் பணியிடங்களுக்கான ஜனவரி 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்துத் அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
”தொழில் மற்றும் வணிகத் துறையில் (தொழில்நுட்பப் பிரிவு) மற்றும் (வேதியியல் பிரிவு) ஆகிய பதவிகளுக்கு, ஜனவரி 9-ம் தேதி நடைபெற உள்ளது. குறிப்பாகத் தேர்வு முற்பகல் மற்றும் பிற்பகல் 5 மாவட்டங்களில் 13 தேர்வுக் கூடங்களில் நடத்தப்படுகிறது. ஜனவரி 10-ம் தேதி முற்பகலில் மட்டும் 5 மாவட்டங்களில் 5 தேர்வுக் கூடங்களில் நடத்தப்படுகிறது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment