37 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த ஒரு சவரன் தங்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/01/2021

37 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த ஒரு சவரன் தங்கம்



சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்துள்ளது. 

கடந்த ஒரு வார காலமாக 37 ஆயிரத்தில் இருந்துவந்த தங்கம் இன்று மேலும் சரிந்து 37 ஆயிரத்துக்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. 

ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை குறைந்தாலும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் விலை உயா்ந்தது. அதன்பின்பு, தங்கம் விலை கடந்த வாரம் மீண்டும் குறையத் தொடகியது.

இதன்தொடா்ச்சியாக, சனிக்கிழமை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.36,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.48 குறைந்து, ரூ.4,608 ஆக விற்கப்படுகிறது. 

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ரூ.69.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.69,700 ஆகவும் உள்ளது. 

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்……………………….. 4,608

1 சவரன் தங்கம்………………………….36,864

1 கிராம் வெள்ளி………………………..69.70

1 கிலோ வெள்ளி………………………..69,700

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்……………………….. 4,652

1 சவரன்  தங்கம்………………………….37,216

1 கிராம் வெள்ளி………………………..70.60

1 கிலோ வெள்ளி………………………..70,600
 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459