மாநிலத் திட்ட இயக்குநரின் அறிவுரைப்படி , " பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு ( Shaala Siddhi ) உட்கூறு சார்ந்து பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீட்டிற்கான ( Self and External Evaluation ) செயல்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் :
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் ( Ministry of Human Resource Development ) வழிகாட்டுதலின் படி , தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் ( NIEPA ) பள்ளி தரங்கள் மற்றும் மதிப்பீட்டு தேசிய திட்டத்தை உருவாக்கி , வழி நடத்தி வருகிறது . ஒவ்வொரு பள்ளியும் தன்னை ஒரு நிறுவனமாக கருத்தில் கொண்டு முன்னேற்றத்திற்கான உத்திரவாதத்தோடு செயல்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும் . " பள்ளி மதிப்பீடு " மற்றும் " பள்ளி முன்னேற்றம் " என்பதே இத்திட்டத்தின் இன்றியமையாத தொலைநோக்குப் பார்வையாகும் . அனைத்துப் பள்ளிகளும் தங்களைத் தாங்களே நேர்மறைச் செயல்பாடுகளோடு ஆராய்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது . இம்மதிப்பீட்டு கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுயமதிப்பீடானது கடந்த 2016-17 , 2018 -19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேற்கொண்டு இதற்கென உள்ள NIEPA website- ல் பள்ளி சார்ந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டது.
இதுபோன்று , புறமதிப்பீடானது , 2018-19 - ம் ஆண்டு முதல் ஒன்றிய வாரியாக தேர்வு செய்த பள்ளிகளில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் , 2018-19 ஆம் ஆண்டு ஒன்றியத்திற்கு 20 பள்ளிகள் வீதம் மொத்தம் 8260 பள்ளிகளிலும் , 2019-20 கல்வி ஆண்டில் ஒன்றியத்திற்கு 40 பள்ளிகள் வீதம் மொத்தம் 16520 பள்ளிகளிலும் இந்த புறமதிப்பீடானது மேற்கொண்டு , இதற்கென உள்ள NIEPA website- ல் பள்ளி சார்ந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டள்ளது. பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு திட்டத்தில் , தற்போது 2020-21 கல்வி ஆண்டிற்கான சுயமதிப்பீடு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேற்கொண்டு இதற்கென உள்ள website- ல் பதிவு செய்யவதோடு மட்டுமன்றி தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிருவாக நிறுவனத்தின் ( NIEPA ) அறிவுரைப்படி random sampling முறையில் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் புறமதிப்பீடு ( External Evaluation ) செய்ய வேண்டும் . பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீட்டுத் திட்டம் பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு என்பது பள்ளியை மதிப்பீடு செய்வதற்கான ஒரு விரிவான செயற்கருவி ஆகும். ஒவ்வொரு பள்ளியின் முக்கிய செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து , அதனை மேம்படுத்தவும் , புதிய உத்திகளைக் கையாண்டு அப்பள்ளியிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் இம்மதிப்பீடானது உதவுகிறது. பள்ளிகளின் செயல்திறன்கள் , பின்வரும் ஏழு செயற்களங்களைக் ( Key Domains ) கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது.
1. பள்ளி வளங்களை கையாளுதல் ( இருப்பு , எதிர்பார்ப்பு , உபயோகிப்பு ) ( Enabling Resources of School : Availability , Adequacy and Usability )
2. கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பிடுதல் ( Teaching - Learning and Assessment )
3. கற்போரின் முன்னேற்றம் , அடைவு மற்றும் வளர்ச்சி Learner's Progress , Attainment and Development ) )
4. ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் பணி சார்ந்த வளர்ச்சியினை நிர்வகித்தல் ( Managing Teacher performance and Professional Development )
5. பள்ளித் தலைமை மற்றும் மேலாண்மை ( School Leadership and Management )
6. உள்ளடங்குதல் , ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ( Inclusion , Health and Safety )
7. ஆக்கபூர்வமான சமுதாயப் பங்கேற்பு ( Productive Community Participation )
Guidelines to Districts reg Shaala Siddhi 2020-21 - Download here...
No comments:
Post a Comment