புதுப்பித்தல் ( Renewal ) விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விரைந்து முடிப்பதற்கான அறிவுரைகளை கல்வி நிலையங்களுக்கு வழங்குவது தொடர்பாக .
கல்வி உதவித் தொகை திட்டம் 2020-2021 தொடர்பாக கல்வி நிலையங்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்துவது , பத்திரிக்கை செய்தி வெளியிடுவது போன்ற பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ஆன்லைன் மூலம் 2020-2021 - ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் கல்வி நிலையங்கள் பதிவேற்றம் செய்ய ஏதுவாக முதற்கட்டமாக புதுப்பித்தல் ( Renewal ) விண்ணப்பங்கள் மட்டும் 10.12.2020 அன்று தொடங்கப்பட உள்ளது.
மேலும் புதுப்பித்தலுக்கான ( Renewal ) விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 31.12.2020 அன்று வரை கால வரையறை செய்யப்பட உள்ளது . எனவே 2020-21 ஆம் கல்வியாண்டில் தங்கள் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கல்லூரிகளை 31.12.2020 அன்றுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கீழ்காணும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து கல்வி நிலையங்களும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
புதுப்பித்தல் இனங்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
மாணவர்களிடமிருந்து பெறப்பட்டு கல்வி நிலையங்களில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும் .
2020-21ம் ஆண்டு முதல் , கல்வி உதவித்தொகை இணையதளத்தில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவ | மாணவியர்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்த விவரம் இடம்பெறும் என்பதால் , அதுகுறித்த விவரங்களையும் மாணவர்களிடமிருந்து பெற்று தயார் நிலையில் வைக்குமாறு கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தப்படவேண்டும்.
புதுப்பித்தல் இனங்கள் பொறுத்தவரை மாணவர்களின் முகவரி , விடுதி தொடர்பான தகவல்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களால் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் திருத்தம் செய்ய இயலும் . கலை , அறிவியல் , தொழில்நுட்ப , பொறியியல் , வேளாண்மை , மீன்வளம் , கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைகழங்களின் இறுதி ஆண்டு வகுப்புகள் 07.12.2020 முதல் தொடங்கவும் , அம்மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் , விடுதி தொடர்பான இனங்களில் , மாணவர்கள் விடுதிகளில் சேர்ந்து பயிலும் மாதத்தினை சரியாக கணக்கிட்டு , அதற்கேற்றவாறு விடுதி விவரங்களை உள்ளீடு செய்ய அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்படவேண்டும்.
மேலும் கல்லூரியில் இடைநிறுத்தம் ( Discontinued ) மற்றும் வேறு கல்லூரிக்கு மாறுதல் ( Transfer ) அடைந்த மாணவ / மாணவியர்கள் விவரங்களை சரிபார்த்து , உறுதி செய்த பின்பே Discontinued / Transfer என்பதை ஆன்லைனில் கல்வித்தொகை இணையதளத்தில் தேர்வு செய்ய வேண்டும் என அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்படவேண்டும் . இதில் ஏற்படும் தவறுகளை மாவட்டம் / மாநிலம் ஆகிய எந்த நிலைகளிலும் திருத்தம் செய்ய இயலாது என்பதால் , மிகுந்த கவனத்துடன் இப்பதிவுகளை மேற்கொள்ள அறிவுத்தப்பட வேண்டும்.
கால நிர்ணயிக்கப்பட்ட நிர்ணயத்துக்குள் அனைத்து புதுப்பித்தல் இனங்களையும் கல்விநிலையங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் . காலநிர்ணயத்தினை நீட்டிக்க கோருவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
கல்லூரிகளிலிருந்து கேட்புகள் சமர்ப்பிக்கும் அதே வேளையில் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் கேட்புகளை சரிபார்த்து உடனடியாக கல்வி உதவித்தொகைக்கான ஒப்பளிப்பு / நிராகரிப்பு செய்து கேட்புகளை துறைதலைவர் அலுவலகத்திற்கு ஆன்லைனில் அனுப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அனைத்து கல்வி நிலையங்களும் முழுமையான கேட்புகளை சமர்ப்பித்துள்ளனரா என்பதற்கான அறிக்கையினை பெற்றுக் கொள்ள , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , இப்பணிகள் தொடர்பாக கல்லூரிகளுக்கு ஏதேனும் இடர்பாடுகள் தெரிவிப்பின் உடனடியாக இவ்வலுவலகத்திற்கு தெரியபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment