Group 4 பாடத்திட்டம் TNPSC வெளியிடுமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பு! - ஆசிரியர் மலர்

Latest

 




29/12/2020

Group 4 பாடத்திட்டம் TNPSC வெளியிடுமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பு!


 கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16.29 லட்சம் ஆகும். தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 13.59 லட்சம். இந்த ஆண்டு கொரோனா பரவல் வேலையிழப்பு  காரணமாக குரூப்4 தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டும் எனத் தெரிகிறது. அரசுவேலை கனவுகளோடு படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள் பாடத்திட்டம் குறித்த தேர்வாணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

கிராமப்புற தேர்வர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் குரூப் 4 பதவிகளுக்கான 2 தேர்வு முறை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி திரும்பப்பெற வேண்டும் என்று கல்வியாளர்கள், தேர்வர்கள் வலியுறுத்தியதன் காரணமாக பழைய பாடத்திட்டப்படியே தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

ஆனால் தேர்வாணையம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே சுமார் 20 லட்சம் தேர்வர்கள் தயாராக முடியும். டிஎன்பிஎஸ்சி இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடாவிடில் தேர்வாணையத்திற்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை துவங்க தேர்வர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

குரூப் 4 பழைய பாடத்திட்டம் அறிய

மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்


Join Telegram : Click here


TNPSC சார்ந்த தகவல்களை பெற இங்கே கிளிக் செய்யவும்



இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459