CBSE - 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம்- நாளை முதல் மேற்கொள்ளலாம் - ஆசிரியர் மலர்

Latest

 




09/12/2020

CBSE - 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம்- நாளை முதல் மேற்கொள்ளலாம்

 


 

தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வு 

 விண்ணப்பங்களில் நாளை (டிச.10) முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ  தெரிவித்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2  வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகின்றன. இந்நிலையில் நடப்பு ஆண்டு கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இணையம் வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன.


இதையடுத்து பொதுத்தேர்வுகள் குறித்த குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவியது.

அதேநேரம் 10 மற்றும் பிளஸ் 2வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது. தொடர்ந்து தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் சிபிஎஸ்இ  அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் தொற்று காரண மாக நீட்டிக்கப்பட்ட விண்ணப் பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் (டிச.9) நிறைவடைகிறது. இதையடுத்து விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை நாளை (டிச.10)முதல் 14-ம் தேதி வரை மேற்கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல்விவரங்களை cbse.nic.in என்றஇணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459