சென்னை: டிப்ளமோ படித்தவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள யமஹா நிறுவனத்தில் அப்பரண்டிஸ் பயிற்சியில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட்டில் யமஹா இருசக்கர வாகனத்தின் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்நிறுவனம் அப்பரண்டிஸ் பயிற்சி தொடர்பாக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.2018, 2019, 2020ம் ஆணடுகளில் டிப்ளமோ படித்து தேர்ச்சி பெற்றவர்கள் நேரில் வந்து நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம் என்று யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது. நேர்முக தேர்வு நடைபெறும் நாட்கள் 8ம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. நேரம் காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. பழகுனர் பயிற்சியில் சேர விரும்புவோர் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்10ம்வகுப்பு சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ் டிப்ளமோ பிரொவிசனல் சர்டிபிகேட் ஆதார் கார்டு(பிறந்த தேதி, 10ம் வகுப்பு சான்றிதழில் உள்ளபடி இருக்க வேண்டும்) டிசி (மாற்றுச் சான்றிதழ்) பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ரெஸியூம்நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் விவி1- சிப்காட் இன்டஸ்ட்ரீஸ் பார்க் வல்லம் வதகல் கிராமம் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் மாவட்டம்
No comments:
Post a Comment