தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மற்றும் மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியும் முதல் கட்டமாக கழிவறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட வேண்டும் என்பதால் கழிவறைகள், குடிநீர் வாதிகள் மற்றும் சுற்றுச்சுவர் இல்லாத பள்ளிகளின் பரிந்துரை பெற்று அனுப்பிடுமாறு பார்வையில் காணும் இவ்வியக்கக. செயல் முறைகளில் கோரப்பட்டது. அதற்கிணங்க பார்வை : இல் காணும் முதன்மைக்கல்வி அலுவலரிடமிருந்து ஈழிவறைகள், குடிநீர் வாதிகள் மற்றும் சுற்றுச்சுவர் சார்ந்த படிவம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது
தற்போது கூடுதல் கழிவறைகளை ஏற்படுத்த இவ்வியக்ககம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே தங்களால் அளிக்கப்பட்ட விவரங்கள் அடிப்படையில் இவ்வியக்ககத்தால் தொகுக்கப்பட்டு அதனுடைய விவரங்கள் அடங்கிய பள்ளியின் பெயர் பட்டியலை இத்துடன் இனைத்து அனுப்புகின்றேன். அதில் தங்கள் மாவட்டத்தைச் சார்ந்ததை மட்டும் தேர்வு செய்து அதில் விடுபட்ட கலத்தில் உரிய விவரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு அதில் தட்டச்சு செய்யப்பட வேண்டும் அதில் தட்டச்சு செய்யும் போது கீழ்காணும் இனங்களை கவனத்தில் கொண்டு தட்டச்சு செய்யப்பட வேண்டும் அப்பள்ளியை சுற்றியுள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை
மாணவர் மாணவிகளின் எண்ணிக்கை கழிவறைகள் ஏற்படுத்த போதுமான இடவசதி உள்ளதா ஆம் அல்லது இல்லை என தெளிவாக குறிப்பிடப்படவேண்டும், போதிய இடவசதி இல்லை எனில் தாங்களே அப்பள்ளிக்குப் பதிலாக வேறு ஒரு இருபாலர் பயிலும் பள்ளியை தேர்வு செய்து அனுப்ப வேண்டும். மேலும் வேறு ஏதாவது திட்டத்தின் கீழ் அப்பள்ளியை தேர்வு செய்து கழிவறைகள் கட்டப்பட்டிருப்பின் அப்பள்ளியின் பெயரை நீக்கிவிட்டு
அதற்குப் பதிலாக இருபாலர் பயிலும் பள்ளியை தேர்வு செய்து அனுப்புதல் வேண்டும்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தங்கள் மாவட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளியின் எண்ணிக்கையில் இருத்தல் அவசியம் அதில் கூடுதல் அல்லது குறைவாகவே இருத்தல் கூடாது மேலும் தங்கள் மாவட்டத்திற்கு என குறிப்பிட்ட பள்ளியானது இருமுறை வரப்பெறாமல் மிகத்துல்லியமாக கணக்கிட்டு இச்செயல்முறை கண்ட ஒரு வார காலத்திற்குள் இவ்வியக்ககம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட -படிவத்தில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
No comments:
Post a Comment