இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி - ஆசிரியர் மலர்

Latest

 




 


31/12/2020

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

 


இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று (டிச.31) கடைசி ஆகும்.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் முறையில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சான்றிதழ் படிப்புகள் மற்றும் செமஸ்டர் தேர்வு அடிப்படையிலான படிப்புகள் தவிர்த்து ஏனைய அனைத்துப் படிப்புகளுக்கும் ஜூலை 2020 பருவத்துக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

இதில், விண்ணப்பிப்பதற்கான டிசம்பர் 31 ஆகும். தொலைதூரப் படிப்புகளில் சேர விரும்புவோர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இதில் ஏதேனும் ஒரு படிப்புக்கு மட்டும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு சேர்க்கைக் கட்டணம் ரத்து செய்யப்படும். மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்தால் கட்டணம் ரத்து செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை, சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தை அணுகலாம். மேலும், 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் புதிய கல்வி செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Join Telegram: Click here

இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459