சமையலர் காலி பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆசிரியர் மலர்

Latest

 




23/12/2020

சமையலர் காலி பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

 


அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 17 சமையலர் காலி பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் எனவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் சமையலர்
பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றும் 18 வயது முதல் 35 வரை உள்ளவர்களாக இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் குடியிருப்பவர் ஆக இருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.


தகுதியான நபர்கள் அரியலூர் மாவட்டம் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 18-01-2021 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என  அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Join Telegram group: CLICK HERE
இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459