நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு சென்ற ஆண்டு தமிழக அரசு அரசாணை எண் 101ன் படி தொடக்கக் கல்வித் துறையை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைத்து ஆணை வெளியிட்டது அதனடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் நிர்வாகத்தின் கீழ் கல்வி மாவட்ட அளவில் தொடக்க, நடுநிலை, மற்றும் உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகள் ஒரே நிர்வாகக் கட்டுப்பாட்டில் வந்தன ஆனால் ஆசிரியர்களுக்கு நன்மை தரக்கூடிய பதவி உயர்வு தரக் கூடிய நிகழ்வுகள் மாற்றப்படவில்லை.
அண்மையில் *வட்டார கல்வி அலுவலர்கள்* நாங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் பெறுகிறோம் ஆகவே *மாவட்டக் கல்வி அலுவலர்* பதவி உயர்வு என்பது வழங்கப்பட வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தின் மூலம் அதற்கான உத்தரவை பெற்றுள்ளார்கள். அதேபோல் *நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களும்* உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் பெற்று வருகின்றனர். ஆனால் எந்தவித பதவி உயர்வும் சுமார் 15 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை ஆகவே *நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும்* உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக பட்டதாரி ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் ஒன்றுகூடி ஆலோசனை செய்து அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளனர் விரைவில் நல்லது நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றனர். இதுதொடர்பாக *கல்வித்துறை செயலாளர்* *இயக்குனர்கள்* விரைவில் முடிவு எடுத்து 1.1.2021 முதல் *நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும்* *உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு* *மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கும்படி ஒருங்கிணைந்த முன்னுரிமை பட்டியலில் வெளியிடுவதற்கு உரிய அரசாணைகள் பிறப்பிப்பார்கள் என்று நம்புகிறோம்
No comments:
Post a Comment