அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு நான்கு முறை ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
புது தில்லி: அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு நான்கு முறை ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அடுத்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படும்; பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும்; இந்த நான்கு தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் பங்கேற்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment