சென்னை கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு - ஆசிரியர் மலர்

Latest

 




13/12/2020

சென்னை கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு

 


சென்னையில் உள்ள கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு தொடங்குகிறது. இணையதள வசதி இல்லாதவர்கள் கல்லூரிக்கு நேரில் சென்றும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வு

சென்னையில் உள்ள கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு தொடங்குகிறது. இணையதள வசதி இல்லாதவர்கள் கல்லூரிக்கு நேரில் சென்றும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை:

கொரோனா நோய் தொற்று காரணமாக கல்லூரி மாணவர்களின் படிப்பும் முடங்கியது.

சென்னையில் உள்ள பல கல்லூரிகள் இளங்கலை 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தயாராகி வருகின்றன.

ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த தேர்வு விடைத்தாள்கள் டிஜிட்டல் முறையிலேயே மதிப்பீடும் செய்யப்படுகிறது.

குருநானக் கல்லூரியில் நாளை (திங்கள்) முதல் தேர்வு தொடங்குகிறது. கூகுளில் உள்ள கிளாஸ்ரூம் செயலி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது.

25 மாணவர்களுக்கு ஒரு கண்காணிப்பு ஆசிரியர் நியமிக்கப்படுகிறார்கள். தேர்வு முடிந்ததும் 30 நிமிடத்துக்குள் விடைத்தாள்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிட வேண்டும். தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். மொத்தம் 100 மதிப்பெண்கள். அரியர் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும் என்றும் கல்லூரி முதல்வர் ரகுநாதன் அறிவித்துள்ளார்.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 16-ந்தேதி முதல் தேர்வுகள் தொடங்குகிறது. 90 நிமிடங்கள் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு எழுதும் போது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்து அனுப்ப வேண்டும்.

டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் மாணவர்கள் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வதற்கும் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இணையதள வசதி இல்லாதவர்கள் கல்லூரிக்கு நேரில் சென்றும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்-லைனில் தேர்வு எழுதுபவர்கள் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ய இயலாமல் போனால் தபால் மூலமும் அனுப்பி வைக்கலாம் என்று முதல்வர் சந்தோஷ்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரிகளில் வருகிற 21-ந்தேதி முதல் தேர்வு நடத்தப்படுகிறது.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தாமதமானதால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் (ஜனவரி) நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459