சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்
அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களை அதிகரிக்க முடியுமா என்று தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கான கட்டண அறிவிப்பை முன்தேதியிட்டு அமல்படுத்தக்கோரி கடலூர் மாணவிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை இன்று விசாரித்த நீதிமன்றம், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைத்தால் உத்வேகம் கிடைக்கும் என்றும்,
அரசுப் பள்ளி மாணவர்கள் மீதான பார்வையை மாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வரும் 17-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
No comments:
Post a Comment